Click to view
தங்கரதம் வந்தது வீதியிலே,
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம்அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள்கவிபாட
செவ்விள நீரின்கண் திறந்து
செம்மாதுளையின்மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில்கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது
மாங்கனிக் கன்னத்தில், தேனூற சிறு மைவிழிக்கிண்ணத்தில்மீன் ஆட
தேன் தரும் போதைகள், போராட
தேவியின்பொன் மேனி தள்ளாட ஆட
இருவரும்:- தங்கரதம் வந்தது
THANGA RATHAM VANTHATHU VEETHIYILEY - movie: Kalai Kovil (கலைக்கோயில்)